நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, August 13, 2018

கொழும்பில் மணமகனுக்காக காத்திருந்த மணமகளுக்கு ஏற்பட்ட விபரீதம்



கொழும்பை அண்டிய புறநகர் பகுதியில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பிலியந்தலையில் பெண் ஒருவருக்கு திருமண வாக்குறுதியை வழங்கிய நபர், அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் மடிக்கணினியை திருடியுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பத்திரிகை ஒன்றில் பெண் வீட்டாரினால் திருமண விளம்பரம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யப்பட்ட விளம்பரத்திற்கமைய, இரத்தினபுரியில் இரத்தின கல் வர்த்தகரின் மகன் எனவும், சிவில் பொறியியலாளராக செயற்படுவதாகவும் கூறி இந்த பெண்ணின் வீட்டுக்கு நபர் ஒருவர் சென்றுள்ளார்.
குறித்த பெண் முதல் திருமணத்தில் தோல்வியடைந்த ஒருவராகும். இதனால் தனக்கு பொருத்தமான மணமகன் ஒருவரை எதிர்பார்ப்பதாக பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளனர்.
அதற்கமைய வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார்.
அத்துடன் அந்த பெண்ணுடன் பழக ஆரம்பித்துள்ளார். இதன் போது தனக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறி பெண்ணின் மடிக்கணினியை கொண்டு சென்றுள்ளார்.
சில நாட்கள் சென்றதும் இந்த பெண்ணின் மோட்டார் வாகனத்தையும் அந்த நபர் கொண்டு சென்றுள்ளார். பின்னர் தேடி பார்த்த போது குறித்த நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மிரிஹான பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments:

Post a Comment