நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 20, 2018

பிரபாகரன் விச ஜந்துவா?: டக்ளஸ்தான் கறையான்!


இந்திய ஊடகமொன்றிற்கு டக்ளஸ் தேவானந்தா வழங்கிய செவ்வியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விச ஜந்து எனவும் அவர் தமிழ் மக்களை அழித்தார் எனவும் தொனிப்படும்

   
       
   
  வகையில் கருத்துத் தெரிவித்ததற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சமூக ஊடகங்களில் டக்ளஸ் தேவானந்தா தரப்பை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனும் கடுமையாக கண்டித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் நேற்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை –

‘தமிழீழ விடுதலைப்புலிகளைத் தவிர ஏனை இயக்கங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில வருடங்களிலேயே இந்தியாவின் கையாட்களாக செயற்படவும் இந்தியாவின் கொள்கைக்கு ஏற்ப செயற்படவும் இனங்கிக் கொண்டனர்.
டக்ளசின் தாய் கட்சியான ஈ.பி.ஆர். எல்.எவ் வும் இத்தகைய நோக்கத்திலேயே செயற்பட்டது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வளர்த்த தமிழ் மக்களையே இவ் ஏனைய இயக்கங்கள இந்திய இராணுவத்துடனும், இலங்கை இராணுவத்துடனும் இணைந்து கொன்று குவித்தது. பின்னர் டக்ளசினுடைய ஈ.பி.டி.பி கட்சியானது இலங்கை இராணுவத்தின் துணைப்படையாகச் செயற்பட்டு முள்ளி வாய்க்காலில் பல லட்சம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கும் துணையாக செயற்பட்டிருந்தது.

பல்லாயிரக்கணக்கானவர்களை கொலை செய்த குற்றச்சாட்டு ஈ.பி.டி.பி மீது மக்கள் சுமத்தியுள்ள நிலையில் சில வழக்குகளில் நீதிமன்றங்களும் தீர்ப்புக்களை வழங்கியுள்ளது. இவ்வாறு இராணுவத்தின்

   
       
   
  அடிமைகளாகவும் துணைப்படைகளாகவும் இருந்த டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியானது தமிழ் மக்களைப் பிடித்துக் கொண்ட கறையானை போன்றவர்களாவர்.

அத்துடன் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுமாயின் இவர்கள் மீதும் எத்தனை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் என்பதும் அப்போது தெரியவரும்.தமிழ் மக்கள் மத்தியில் தேசத் துரோகியாக பார்க்கப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தா பிரபாகரன் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்தார்.

0 comments:

Post a Comment