நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 20, 2018

இலங்கை அரசு பொறுப்பு கூற வேண்டியது அவசியம்- ஐ.நா


இறுதிக் கட்ட போரில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.

ஜனாதிபதி

   
       
   
  மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ரெஹாம் அல் பர்ரா புலமைப் பரிசில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஐ.நா. மனித உரிமை பேரவை கைவிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஐ.நா. வின் நிலைப்பாடு என்ன என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

இலங்கை அரசாங்கம்

   
       
   
  யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலக முடியாது.

சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம்.

இவ் விடயமாக நாம் தொடர்ந்தும் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment