நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 15, 2018

கிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் - பாடசாலையில் பரபரப்பு




கிளிநொச்சி,
   
       
   
  கந்தபுரம்- 2 பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் மூவர் பிஸ்கட் உண்ட பின்னர் மயங்கி விழுந்த நிலையில் அக்கராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

மாணவிகள் பாடசாலை வழியில் உள்ள கடையொன்றில் பிஸ்கட் வாங்கியுள்ளதுடன், அதை சாப்பிட்ட சில விநாடிகளில் மயங்கி விழுந்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட ஆசிரியர்கள், அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பினை மேற்கொண்டு மாணவிகள் மூவரையும் அக்காராயன் மருத்துவமனையில்

   
       
   
  அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலை மாணவிகளில் ஒருவர் தரம் ஏழிலும் மற்றைய இருவர் தரம் மூன்றிலும் கல்வி கற்பதாகவும், தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment