நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, May 18, 2024

வவுனியாவில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் சலசலப்பு | The Commotion At The Vavuniya Tribute Event


வவுனியாவில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் சலசலப்பு
வவுனியாவில் இடம்பெற்ற உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு, அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன்போது, அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு மற்றும் முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் சலசலப்பு

இதனையடுத்து, நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இது போரில் இறந்தவர்களின் நிகழ்வு என அறிவிக்கும்படி தெரிவித்திருந்த நிலையில் குறித்த நிகழ்வு எதற்காக என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைக்கு அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலரும் விசனம் தெரிவித்து முரண்பட்டுள்ளனர்.

மதத்தலைவர்கள்

இதனுடன், மக்கள் மழை பெய்யத் தொடங்கியதும் மழையில் நனைந்து கொண்டிருந்த போது உரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையாலும் அங்கு சலசலப்பு ஏற்பட்டு மக்கள் தீபம் ஏற்றிவிட்டு வெளியேறி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அதிதிகளான மதத்தலைவர்களும் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment