Tuesday, May 7, 2024

கணவனுக்கு நித்திரைக் குளிசை கொடுத்து ஆண் நண்பனுடன் உல்லாசம் அனுபவித்த ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பொலிசாரிடம் பிடிபட்டது எப்படி?


கணவனுக்கு நித்திரைக் குளிசை கொடுத்து ஆண் நண்பனுடன் உல்லாசம் அனுபவித்த ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பொலிசாரிடம் பிடிபட்டது எப்படி?

கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ளக் காதலனை வீட்டுக்கு அழைத்து வந்த பெண்ணை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்தனர்.

கெப்பிட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்காதல்
பெண்ணின் (32) வயதுடைய கணவர் சுகவீனம் காரணமாக ஏப்ரல் (13) மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ​டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு ஏப்ரல் (14) மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபராக பெண்ணும் கள்ளக் காதலனும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு வந்த பெண், கணவனுக்கு பால் தேநீரில் தூக்க மாத்திரையை போட்டு கொடுத்த பின்னர் தனது கள்ளக் காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வீட்டுக்கு அழைத்துள்ளார்.

கணவன் வேலைக்குச் செல்வதற்கு கடந்த 14ஆம் திகதி, எழுந்திருக்காததால், சந்தேகமடைந்த பெண், தனது கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் கள்ளக் காதலன் , நோயாளியின் அருகில் வந்து வைத்தியர்கள் கொடுத்த மருந்தைத் தவிர வேறு ஏதேனும் மருந்தை உட்கொண்டீர்களா எனக் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் சந்தேகம் அடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாக நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 04 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபரின் கணவர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில், தனது மருமகள் பால் தேநீர் தயாரித்து தனது மகனுக்கு குடிக்க கொடுத்ததாக , கணவனின் தந்தை மஸ்கெலியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளா​ர்.

அதனையடுத்து மஸ்கெலியா பொலிஸார் இது தொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்தபோதே பெண் தூக்க மாத்திரை கொடுத்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கைதான பெண்ணை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை (06) ஆஜர்படுத்திய போது, சந்தேக நபரை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job